சென்னை மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி செய்தி கொடுத்த வானிலை ஆய்வு மையம்

சென்னையில் கடந்த சில தொடர்ச்சியாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்த நிலையில் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீண்டும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் இன்று பெய்யும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.