3 மணி நேரத்தில் மீண்டும் கனமழை: வானிலை எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி

நேற்று சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்ததால் சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது