shadow

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

நீலகிரி கோவை விழுப்புரம் வேலூர் திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இன்று முதல் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் கனமழை காரணமாக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படுமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது