shadow

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் ’வானிலை நிலவரங்கள் துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.