சென்னை மருந்துக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்

சென்னை மருந்துக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்

சென்னையில் மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்த தனியார் மருந்து கடைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதை அடுத்து மாஸ்க் உள்பட மருந்து பொருட்களை அதிக விலைக்கு ஒருசில மருந்துக்கடைக்காரர்கள் விற்பனை செய்வதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சென்னை அடுத்து, அண்ணா சாலை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனியார் கடை ஒன்றில் கிருமி நாசினி, முகக் கவசம் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத் துறை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேரடியாக அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு கடைக்காரரிடம் விசாரணை செய்தனர். விசாரணையை மேற்கொண்டும் தொடர வேண்டி உள்ளதால், அந்த கடையை பூட்டி சீல் அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply