shadow

சென்னை மெரீனாவில் சிறப்பு பாதை: முதல்வர் திறந்து வைக்கின்றார்!

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த பாதைகளின் பணி தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில் சிறப்பு பாதை நாளை அதாவது நவம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை மெரினாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு பாதையைதிறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பெசண்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகள் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.