shadow

விஜய் படத்தின் வில்லனாகும் பிரபல தொழிலதிபர்

sam-paulஇயக்குனர் விஜய் இயக்கிய ‘தேவி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘குமரிக்காண்டம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஜெயம் ரவி, சாயிஷா சேகல், வருண், தம்பிராமையா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்க சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சாம் பால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பியூட்டி பார்லர் உள்பட பல தொழில்கள் செய்து வரும் இவர் முதன்முதலாக வெள்ளித்திரையில் வில்லனாக கலக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் தயாரிகும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசை அமைக்கின்றார். மேலும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

Leave a Reply