சென்னை ஐஐடியில் ஆன்லைனில் படித்தால் உதவித்தொகை!

சென்னை ஐஐடியில் பிஎஸ்சி ஆன்லைன் படிப்பைப் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யபப்ட்டுள்ளது. இந்த திட்டத்தை ரெனால்ட் நிசான் என்ற நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி கீழ்க்கண்ட மூன்று படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது

1. அடிப்படைப் பட்டம் (Foundation programme),
2. டிப்ளமோ பட்டம் (Diploma programme),
2. இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme)

2-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் கல்லூரிகளில் வேறு இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரிகள் மற்றும் பணியில் இருப்போரும் இந்தப் பட்டப்படிப்பில் இணையத் தகுதியானவர்கள் ஆவர்.

விருப்பமுள்ள மாணவர்கள் ஐஐடி சென்னை தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுதித் தேர்வுக்கு ரூ.3000 கட்டணம் செலுத்த வேண்டும்