கொரோனா எதிரொலி; மூடப்பட்டது ஹூண்டாய் கார் தொழிற்சாலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஹூண்டாய் கார் தொழிற்சாலை மூடப்பட்டதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது

கொரோனா தொடர்பாக அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடல் ஆலை திறக்கப்படாது என்று சற்றுமுன் ஹூண்டாய் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்சாலைகள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை என அறிவிப்பு செய்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 31 வரை சிப்காட் ஆலைகள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply