முதல்முறையாக கொரோனாவுக்கு பலியான தலைமை நர்ஸ்:

சென்னையில் பரபரப்பு

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் மற்ற செவிலியர்களுக்கு பணி நேரம் ஒதுக்குதல் உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்த 58 வயது தலைமை பெண் நர்ஸ் ஜோன் பிரிசில்லா என்பவர் நேற்று இரவு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். தலைமை நர்ஸ் ஒருவர் கொரோனாவுக்கு பலியானது சென்னையில் இதுவே முதல்முறை என்பது அதிர்ச்சிக்குரிய தகவல் ஆகும்

இவர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு அன்புடன் சிகிச்சை அளித்து வந்த நர்ஸ், அதே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply