shadow

தேர்தல் தேதியை அறிவிக்காவிட்டால் சிறை! சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் காலம் தாழ்த்தி கொண்டே வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்தபோது உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய இனியும் காலம் தாழ்த்தினால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த தேதியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி சென்னை ஐகோர்ட் தேர்தல் ஆணையத்திற்கு கெடு விதித்தது. ஆனால் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால் மாநில அரசு மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இன்று இந்த வழக்கின் தீர்ப்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அட்டவணையை ஆகஸ்ட் 6ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அவ்வாறு தாக்கல் செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் இனியும் காலம் தாழ்த்தினால் மாநில தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேறிடும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply