shadow

ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: இன்று தீர்ப்பு

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தது குறித்த வழக்கு ஒன்று கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்த வழக்கின் விசாரணைகள் முழுமையாக முடிந்து தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.

இந்த தீர்ப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்போம். அதேபோல் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பும் நாளை (சனிக்கிழமை) பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply