ஆதின மடத்திற்குள் நுழைய நித்தியானந்தாவிற்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆதின மடத்திற்குள் நுழைய நித்தியானந்தாவிற்கு தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

மதுரை ஆதின மடத்திலும், அதற்கு சொந்தமான கோவில்களிலும் நித்யானந்தா நுழைய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. தடையை மீறி நித்தியானந்த நுழைந்தால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை ஐகோர்ட் தனது உத்தரவில் கூறியுள்ளது.

மேலும் மடாதிபதிகள், ஆதினங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அந்த மடத்தின் சொத்துக்களை கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி மடங்களில் ஏதேனும் முறைகேடு நடைபெற்றிருந்தால், அது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவால் இனி ஆதின மடத்திலும், அதற்கு சொந்தமான கோவில்களிலும் இனி நித்தியானந்தா நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply