இன்று முதல் சென்னை ஐகோர்ட்டில் வீடியோ கான்பிரன்ஸ் விசாரணை

chennai-high-court

கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொல்கத்தா ஐகோர்ட் உள்பட ஒருசில ஐகோர்ட்களில் வீடியோ கான்பிரன்ஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை ஐகோர்ட்டிலும் இன்று முதல் நேரடி விசாரணை கிடையாது என்றும் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என்றும் சென்னை ஐகோர்ட் பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.