ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு:

சென்னை உயர்நீதிமன்றம்

ஜெயலலிதா சொத்துக்கள் மீது தீபா, தீபக்கிற்கு உரிமை உண்டு என்றும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா, தீபக்கை சொத்துக்களின் 2ஆம் நிலை வாரிசுகளாக அறிவிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம் என்றும், மீதமுள்ள வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அலுவலகமாக மாற்றலாம் என்றும் நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்

நீதிபதிகள் பரிந்துரையின்படி முதல்வர் அலுவலகமாக வேதா இல்லம் மாறுமா? என்பதையும் ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் வேதா இல்லத்தை முதல்வர் இல்லமால தொடர அனுமதிப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply