2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இரண்டு மணி நேரம் டாஸ்மாக் கடையை திறந்து வைக்கும் வழக்கை வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக மே 3ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாக மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூன்றாம் தேதி வரை திறக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திடீரென மூடியது மதுப்பிரியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளை குறைந்தபட்சம் தினமும் 2 மணி நேரம் திறந்து வைக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னையை சேர்ந்த வசந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அஸ்ஸாம் கேரளா போன்ற மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதித்த போதும் அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார் இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணி நேரம் திறக்க அனுமதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனையடுத்து டாஸ்மாக் கடைகள் மே 3ஆம் தேதி வரை திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது

Leave a Reply