shadow

பேருந்து கட்டண உயர்வு: அரசின் கொள்கையில் தலையிட முடியாது: சென்னை ஐகோர்ட்

தமிழகத்தில் சமீபத்தில் திடீரென முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஏழை எளியவர்களின் சம்பளம், வாழ்க்கைத்தரம் உயராத நிலையில் சுமார் 50% வரையிலான இந்த பேருந்து கட்டண உயர்வு அவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யபப்ட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கில் கருத்து கூறிய நீதிபதிகள், ”பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்றும் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Reply