நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்: திமுகவிற்கு ஐகோர்ட் கண்டனம்

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்: திமுகவிற்கு ஐகோர்ட் கண்டனம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது ஏரிகளை பார்வையிட செல்வதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதற்கு எதிர்ப்பும் ஆளும்கட்சி சார்பில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கட்சராயன் ஏரியை பார்வையிட சென்ற போது ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், முன்னுக்கு பின் முரணான தகவல்களை திமுக கூறி வருவதாகவும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக, மாற்ற முயற்சிக்க கூடாது என்றும் திமுகவிற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply