வண்டலூரில் வரும் 8ஆம் தேதி பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் கலந்துகொள்ள இருந்த கூட்டத்திற்கு தடை விதிக்குமாறு விடுதலை சிறுத்தைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளூபடி செய்யப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கவுதம் சென்னா என்பவர், கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மோடி கூட்டத்திற்கு எதிராக ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவில் வண்டலூர் பகுதி மிகவும் பதற்றம் நிறைந்தது என்றும், போக்குவரத்து நெருக்கடியான அந்த பகுதியில் பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் நடத்தினால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.

அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. கவுதம் சென்னாவின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும், வெறும் விளம்பர நோக்கத்திற்காக இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதால் தள்ளுபடி செயவதாகவும் நீதிபதி ரவிச்சந்திரபாபு கூறினார். அதனால் நரேந்திரமோடியின் கூட்டத்திற்கு எவ்வித தடையும் இல்லை என பாரதிய ஜனதா கட்சியினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Leave a Reply