shadow

vaaluபலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இறுதியில் ஜூலை 17 என அறிவிக்கப்பட்ட வாலு’ திரைப்படம், அந்த தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, இந்த படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்தார்.

‘வாலு’ படத்தின் வெளியீட்டிற்கு தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று மேஜிக் ரேஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டது. அதில் “தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநில வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்தார்கள். அதனை மீறி தற்போது வேறு ஒரு நபர் மூலமாக இப்படத்தை வெளியிட முயல்கிறார்கள்.

எனவே என்னைத் தவிர வேறு நபர் மூலமாக ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று மேஜிக் ரேஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வழக்கை மேஜிக் ரேய்ஸ் சார்பாக வழக்கறிஞர் என். ரமேஷ் தாக்கல் செய்து வாதாடினார்.

தயாரிப்பாளர் சக்ரவர்த்தி தரப்பில் இருந்து மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கை ஜூலை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தன்னையும் மூன்றாவது மனு தாரராக சேர்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் தரப்பில் கோரப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ‘வாலு’ வழக்கு விசாரணைக்கு வந்தது. மேஜிக் ரேஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘வாலு’ படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், மூன்றாவது மனு தாரராக சேர்க்க வேண்டும் என்று டி.ராஜேந்தர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தில் இந்த உத்தரவால் ‘வாலு’ படத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

‘வாலு’ படத்துக்கு தடைக் கேட்டு, மேலும் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வழக்குகளின் விசாரணை நாளை வரவிருக்கிறது. இந்த நெருக்கடியால் ஜூலை 17ம் தேதி ‘வாலு’ வெளியாக வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

Leave a Reply