கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி: பெற்றோர் மாணவர்கள் மகிழ்ச்சி

கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி: பெற்றோர் மாணவர்கள் மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததால் அந்த பள்ளியை இழுத்து மூடப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி திறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது

பொதுத்தேர்வை எதிர்நோக்கி உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் பெற்றோர் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.