சென்னையில் கனமழை: பல மாவட்டங்களிலும் மழை: இன்று விடுமுறையா?

சென்னையில் கனமழை: பல மாவட்டங்களிலும் மழை: இன்று விடுமுறையா?

நேற்றிரவு முதல் சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

மழை என்றாலே உடனே பொதுமக்களுக்கு ஞாபகம் வருவது விடுமுறைதான். மழை பெய்தவுடனே தொலைக்காட்சி செய்திகளில் இன்று விடுமுறை அறிவிப்பு வருமா? என மாணவ, மாணவிகள் என்று எதிர்பார்ப்பதுண்டு

இந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசான முதல் மிதமான மழைப் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply