shadow

ஐபிஎல் போட்டிகளுக்கு தடையா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் காவிரி பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என ஒருசில அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.

இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், சூதாட்டத்தை தடை செய்யாமல் இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும், கடந்த 2013ம் ஆண்டு சூதாட்டம் குறித்த புகாரில் அணிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

அவரது மனு இன்று தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி பி.சி.சி.ஐ. மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

நாட்டில் பல சட்டங்கள் இருந்தும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊழல் ஒழிக்கப்பட்டுவிட்டதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாட்டில் ஏராளமான சட்டங்களும் ஏராளமான குற்றவாளிகளும் இருப்பதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *