முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக சென்னையில் உள்ள சாலை ஒன்றுக்கு தமிழ்ச்சாலை என்று பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

சென்னையில் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகம் எக்மோர் அருகிலுள்ள ஹால்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலைக்கு தமிழ்ச்சாலை என்று பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வரும் சட்டப்பேரவை கூட்டத்தினோது அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

பெயர் மாற்றம் குறித்த கோப்புகள் முறைப்படி முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் முறைப்படியான அறிவிப்பு வெளிவரும் என்றும் தமிழக அரசின் தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழின் பெயரில் ஒரு சாலை தலைநகரில் அமைவது குறித்து தமிழக மக்கள் பெரிதும் மகிழ்ச்சியை சமூக இணையதளங்களின் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply