பானிபூரியில் புழுக்கள்: தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சென்னையில் பானிபூரி விற்பனை செய்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை அம்பத்தூர் பகுதியில் பானிபூரி விற்பனை செய்யும் வடமாநில இளைஞர் ஒருவரின் பானிபூரியில் புழுக்கள் இருந்தது தெரியவந்தது

இதுகுறித்து பொதுமக்கள் விளக்கம் கேட்டதற்கு அந்த இளைஞர் சரியாக பதில் கூறவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த இளைஞரை அடித்து துவைத்தனர்

இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக வந்து வட மாநில இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்