மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் நாளை விவசாய பயிற்சி முகாம் ஆரம்பமாக உள்ளது. அதில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து ஏராளமான விவசாயிகளை அழைத்து செல்ல தமிழக வேளாண்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஏற்பாட்டில் குளறுபடி காணப்பட்டதால் இன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் விவசாயிகள் ரயில் மறியல் செய்தனர். அதனால் திடீர் பதட்டம் ஏற்பட்டது.

திருச்சியில் இருந்து நாக்பூருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயிலில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இடமில்லாமல் இருந்தது. திருச்சி மற்றும் விழுப்புரத்திலேயே அதிக அளவு விவசாயிகள் ஏறியதால், சென்னையில் உள்ளவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே ஆத்திரமடைந்த சென்னை மற்றும் காஞ்சிபுரம் விவசாயிகள் எழும்பூர் ரயில்நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர். தகவல் தெரிந்து உடனடியாக வந்த ரயில்வே போலீஸார் விவசாயிகளை அப்புறப்படுத்தி நிலைமையை சமாளித்தனர். இந்த சம்பவம் காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply