சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

சென்னை கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 5வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை செய்துள்ளது

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டுமானால் 282 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இன்று இங்கிலாந்து அணி பேட்டிங் களத்தில் இறங்கியது. அஅனால் 207 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று டெஸ்ட் தொடரை வென்றது., இந்த இன்னிங்ஸில் ஜடேஜா 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக முச்சதம் கண்ட கேகே நாயரும், தொடர் நாயகனாக கேப்டன் விராத் கோஹ்லியும் தேர்வு செய்யப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published.