கோலிவுட்டின் பிரபல நடிகை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு த்ரிஷாவின் குளியல் வீடியோ காட்சி ஒன்றை ஒரு பிரபல வார பத்திரிகை செய்தியாக வெளியிட்டிருந்தது. வீடியோவும் அந்த வார பத்திரிகையின் இணையதளத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த த்ரிஷாவின் தாயார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பத்திரிகை மீது நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் ஒருமுறை கூட த்ரிஷாவின் தாயார் உமாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை.

நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகாததை நீதிபதி கண்டித்ததோடு, அடுத்த விசாரணையின் மீது கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என வாரண்ட் அனுப்ப உத்தரவிட்டார். அடுத்த விசாரணையிலும் அவர் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படலாம் என்பதால் கண்டிப்பாக ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply