சென்னையில் 20 கடைகளுக்கு திடீரென சீல் வைத்த அதிகாரிகள்: என்ன காரணம்?

சென்னையில் 20 கடைகளுக்கு திடீரென சீல் வைத்த அதிகாரிகள்: என்ன காரணம்?

சென்னையில் முறையாக உரிமம் பெறாத, தொழில் வரி செலுத்தாத 20 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீரென சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து கூறிய அதிகாரிகள், ‘அதிகாரிகள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள், தனியாக உள்ள கடைகள் என 80 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், இதில், 60 கடைகளின் உரிமையாளர்கள் மட்டும், உரிய உரிமம் பெற்று, தொழில்வரியும் செலுத்தியதாக கூறினர்.

நோட்டீஸ் அனுப்பியும், உரிமம் பெறாத, தொழில்வரி செலுத்தாத, 20 கடைககளுக்கு சீல் வைத்ததாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply