மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் எவ்வளவு? சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ.500 அபராதம் என்றும், சலூன், ஜிம், வணிக வளாகங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் ரூ.5000 அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு முறைக்கும் மேலாக விதிகளை மீறும் நிறுவனங்கள் கடைகள் வணிக வளாகங்கள் ஆகியவை சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்து உள்ளது

Leave a Reply

Your email address will not be published.