செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றம்: அதிர்ச்சியில் சென்னை மக்கள்

நேற்று வெளுத்து வாங்கிய மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து தற்போது 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு வரை செம்பரம்பாக்கத்தில் பெய்த மழையின் அளவு 19 செ.மீட்டராக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 2,000 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது என்பதால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்குமா? என்ற அச்சத்தில் சென்னை பொதுமக்கள் உள்ளனர்.