சென்னை பேருந்தில் கொரோனா இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெண்

கோவையில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்து கொண்டு வந்து கொண்டிருந்த போது அந்தப் பேருந்து மேல்மருவத்தூர் அருகே வந்தபோது திடீரென அதில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் தனது கொரோனா இருப்பதால் உடனடியாக பேருந்தை நிறுத்தும் படி கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பேருந்தை நிறுத்தினார். இதனை அடுத்து அவர் பேருந்திலிருந்து கீழே இறங்கி பின்னால் வந்து கொண்டிருந்த காரில் ஏறிச் சென்றுவிட்டார்

இதனையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் கடும் அச்சம் அடைந்தனர். தங்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்கள் அனைவரும் போராட்டம் செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது பேருந்திலிருந்து கீழே இறங்கிய பெண் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக கொரோனா இருப்பதாக பொய் சொல்லி பேருந்திலிருந்து இறங்கி நண்பர்களுடன் காரில் சென்றது தெரியவந்தது

இதனையடுத்து பயணிகளை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்பதற்காக கொரோனா இருப்பதாக பொய் கூறிய இளம் பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply