சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியில் பெருவாரியாக மக்கள் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை சலுகை விலையில் வாங்கிச் செல்வார்கள். அதுபோல இந்தவருடமும் புத்தக கண்காட்சி நாளை முதல் தொடங்க இருக்கின்றது.

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை முதல் வரும் 22ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும். இதில் தமிழகத்தில் உள்ள முன்னணி பதிப்பகங்கள் அனைத்தும் கலந்து கொண்டு தங்கள் பதிப்பகத்தின் புத்தகங்களை விற்பனைக்கு வைக்க ஸ்டால்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கு ரூ.10 நுழைவு கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் இங்கு விற்பனையாகும் புத்தகங்கள் அனைத்திற்கு 10% சலுகை விலையில் விற்பனை செய்யப்படும்.

சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்த புத்தகக்கண்காட்சி செயல்படும். பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்லும்படி இந்த கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply