ருத்ராஜின் ருத்ரதாண்டவம்: சென்னை அணி அபார வெற்றி

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மிக அபாரமாக விளையாடி 88 ரன்கள் எடுத்த ருத்ராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் இந்த வெற்றியை அடுத்து 12 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் புள்ளி பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது