ஏப்ரல் 1 முதல் பழைய காசோலைகளும் செல்லும்: புதிய அறிவிப்பு!

ஏப்ரல் 1 முதல் ஒரு சில வங்கிகளின் காசோலைகள் செல்லாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கு மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஓரியண்டல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடனும் இணைக்கப்பட்டன. மேலும் அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் இணைக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இணைக்கப்பட்ட வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பழைய காசோலைகள் செல்லும் என்றும் மேலும் அவகாசம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply