கொரோனாவுக்கு பலியான முன்னாள் ஹைகோர்ட் நீதிபதி

அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் தினந்தோறும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் கொரோனா வைரசுக்கு பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை, ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரையும் எந்தவித தயக்கமுமின்றி தாக்கி வருகிறது

அதுமட்டுமின்றி கடந்த சில வாரங்களாக காவல்துறையினர் ராணுவ வீரர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கியது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவருக்கு கொரோனா தாக்கியுள்ளது மட்டுமன்றி அவர் உயிரிழந்தார்ர் என்ற தகவலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் அஜய் குமார் திரிபாதி. இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் வெளிவந்துள்ளது

ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவருக்கே கொரோனா பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply