சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனையை நேற்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ரு.3க்கு இரண்டு சப்பாத்திகளும், பருப்பு கடைசல்களும் வழங்கப்படும் இந்த விற்பனையை நேற்று முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகத்திலும், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்திலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே சென்னை உள்பட அனைத்து மாநகரங்களிலும் அம்மா உணவகத்தில் இட்லி, தயிர் சாதம், லெமன் சாதம், கீரை சாதம் ஆகிய உணவு வகைகள் வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் சென்னையில் நேற்று முதல் சப்பாத்தி விற்பனை தொடங்கியதால் சென்னையில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் செயல்படுத்த படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
[embedplusvideo height=”400″ width=”500″ editlink=”//bit.ly/1jmgmw2″ standard=”//www.youtube.com/v/-lgtAHkwfJA?fs=1″ vars=”ytid=-lgtAHkwfJA&width=500&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep6207″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.