shadow

சென்னை மக்களே ஜாக்கிரதை: 9 மணிக்குள் இடி மின்னலுடன் மழை பெய்யும்!

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று சில மணி நேரங்களில் மழை கொட்டப்போகிறது.

சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு அம்மாவட்ட மக்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்துள்ளது.