சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சுசீந்திரன் ஹீரோ!

சீனுராமசாமியின் அடுத்த படத்தில் சுசீந்திரன் ஹீரோ!

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ஸ்போர்ட்ஸ் திரைப்படமான ’சாம்பியன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஸ்வா என்ற நடிகர் தற்போது சீனுராமசாமி இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒரு இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரின் கதை என்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு அகதியாக வரும் இளைஞர் ஒருவர் திடீரென காதல்வசப்பட்டதால் ஏற்படும் பிரச்சனைகளை அவர் எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply