சிவகார்த்திகேயன் அப்பா வேடத்தில் நடிகர் சார்லி

சிவகார்த்திகேயன் அப்பா வேடத்தில் நடிகர் சார்லி

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘வேலைக்காரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக பிரபல நடிகர் சார்லி நடித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுவரை பல படங்களில் நகைச்சுவவ மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்துள்ள சார்லி இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியபோது ‘ஆம், நான் சிவகார்த்திகேயன் தந்தையாக ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் தந்தை-மகன் உறவு மிகவும் வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். அதே நேரத்தில் மகனுக்கு ஊக்கமுட்டுபவராகவும், முதுகெலும்பாகவும் இருக்கும் கேரக்டரில் நடித்துள்ளேன்

சிவகார்த்திகேயன் ஒரு ஜாலியான நபர். அவருடன் பணிபுரிவது எனக்கு மிகவும் வசதியாக இருக்கும். சிவகார்த்திகேயனின் காதலியாக நயன்தாரா இந்த படத்தில் நடித்திருந்தாலும் எனக்கும் நயன்தாராவுக்கும் இணைந்து ஒரு காட்சி கூட இல்லை’ என்று சார்லி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.