shadow

நீட்தேர்வு அவசர சட்ட வரைவு ஒப்படைப்பு. மாணவர்களின் கனவு நனவாகுமா?

தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில், விலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.

இருப்பினும் தமிழக அரசு இதுகுறித்து அவசர சட்டம் இயற்றினால் இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் என்று மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அமைச்சர்களிடம் ஆலோசனை செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர சட்டத்திற்கான முன்வரைவை தயாரிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கான முன்வரைவை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சற்றுமுன் ஒப்படைத்தார். இந்த அவசர சட்டத்தின் முன்வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் இந்த ஆண்டு மட்டும் தமிழக மாணவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply