கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாவது டோஸ் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தாலும் இது குறித்து விஞ்ஞானபூர்வ தேவையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘முதல் மற்றும் இரண்டாவது டோஸ் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் விஞ்ஞானபூர்வமான தேவையை அனுசரித்து மூன்றாவது டோஸ் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நிதி ஆயோக்கின் சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் தெரிவித்தார்.