மீண்டும் ரூ.500 நோட்டு செல்லாதா?

ஒரு சில வகை 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவி வரும் வதந்தியால் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது

500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி அருகே பச்சை கோடு உள்ள நோட்டுகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்து அருகே உள்ள நோட்டுகள் ஆகிய இரண்டு வகை நோட்டுகள் செல்லாது என்று வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து விளக்கம் கூறிய போது மேற்கண்ட இரண்டு வகை நோட்டுகளும் செல்லும் என்றும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது