shadow

9

மத்திய அரசு அலுவலகங்களுக்கு வரும் 14ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி பொதுவிடுமுறை நாட்கள் என மத்திய அரசு செய்திக்குறிப்பு ஒன்று நேற்று தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கார் பிறந்தநாள் விழா என்பதற்காகவும், ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடப்பதாலும், இந்த இரண்டு நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

தனியார் நிறுவனங்களும் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

Leave a Reply