shadow

‘சென்னை உயர்நீதிமன்றம்’ ஆகிறது ‘மெட்ராஸ் ஐகோர்ட்’. பாராளுமன்றத்தில் விரைவில் தீர்மானம்
highcourt
கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் உயர்நீதிமன்றம் மெட்ராஸ் ஐகோர்ட் என்னும் பெயரில் இயங்கி வரும் நிலையில் தற்போது இந்த நீதிமன்றத்தின் பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மெட்ராஸ் என்ற பெயரை நீக்கிவிட்டு சென்னை நகரத்தின் பெயரிலேயே உயர்நீதிமன்றத்தை மறுபெயரிட வேண்டும் என கடந்த சில மாதங்களாக வழக்கறிஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை தொடர்ந்து வைத்ததை முன்னிட்டு தற்போது இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளஹு. இதற்கான மசோதா ஒன்றையும் இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மசோதா நிறைவேறிய பிறகு மெட்ராஸ் ஹைகோர்ட் என தற்போது அழைக்கபட்டு வரும் உயர் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் என தெரிகிறது. இந்த மசோதா எந்த வித எதிர்ப்பும் இல்லாததால் இந்த மசோதா  குநிறைவேறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.

English Summary: Central Government decided to change the name of ‘Madras High Court’

Leave a Reply