மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அக்கோவிலுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன

அந்த வகையில் தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. இந்த தடை காரணமாக இனிமேல் திருப்பதி ஏழுமலையான் கோவில் போல மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்போன் கொண்டு செல்ல முடியாது

இருப்பினும் அரசு அதிகாரிகள், பாதுகாவலர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளை செல்போன் விஷயத்தில் விதிவிலக்கு அளித்துள்ளது. மேலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்தியப் படை பாதுகாப்பை தமிழக அரசு கோர வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியதோடு, தேவைப்பட்டால் கோவிலின் மின் இணைப்பையும் மாற்றியமைக்கவும் வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.