சென்ற ஆண்டு டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் பேருந்து ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதையும் உலுக்கி எடுத்தது. இதையடுத்து பேருந்துகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே பெண்களின் பேருந்து பயணம் பாதுகாப்பான முறையில் இருக்க பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் அறிவித்துள்ளார்.

முதல்கட்டமாக இந்தியாவில் உள்ள 32 முக்கிய நகரங்களில் இயங்கும் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும், அது மட்டுமின்றி பேருந்துகளில் ஜி.பி.எஸ் கருவியும் பொருத்தி பேருந்து எந்த இடத்தில் செல்கிறது கண்டுபிடிக்கவும் வழிவகை செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் இம்முறையை தனியார் பேருந்துகளிலும் கடைபிடிக்க சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply