shadow

ஏர்செல் சிவசங்கரன் மீது சிபிஐ வங்கிமோசடி வழக்குப்பதிவு

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சிவசங்கரன் வங்கிகளில் ரூ.600 கோடி மோசடி செய்துவிட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த கடன் மோசடி தொடர்பாக சிவசங்கரனின் பிரிட்டிஷ் வர்ஜின் தீவுகளில் உள்ள அக்சல் சன்ஷைன் லிமிடெட், பின்லாந்து நாட்டில் வின் விண்ட் ஓய் ஆகிய 2 நிறுவனங்கள் மீதும், அவற்றில் பணியாற்றிய தலைவர், இயக்குனர்கள் உள்ளிட்ட 24 அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த கடன் மோசடியில், ஐ.டி.பி.ஐ. வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக ஆதாரங்கள் இருப்பதால் ஐ.டி.பி.ஐ. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த கிஷோர் கரத் (தற்போது, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்), துணை நிர்வாக இயக்குனராக இருந்த மெல்வின் ரெகோ (தற்போது, சிண்டிகேட் வங்கி நிர்வாக இயக்குனராக உள்ளார்) உள்பட 15 உயர் அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Reply