shadow

காவிரி தண்ணீர் பிரச்சனை. தமிழகத்தில் இன்று முழு அடைப்பு

bandhசுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு தண்ணீர் தர முடியாது என்று கூறி வரும் நிலையில் கர்நாடக மாநிலத்திடம் இருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி தமிழகத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது இதில், ஏறத்தாழ ஆயிரம் இடங்களில் சாலை மறியல் போராட்டம் மற்றும் 100 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

சம்பா சாகுபடி மேற்கொள்ள காவிரியில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்துக்குத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்தது.

இந்த போராட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:

இப்போராட்டத்துக்கு வர்த்தக அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதால், கடையடைப்பு முழு வெற்றிபெறும். தஞ்சாவூர் ரயிலடியில் தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன், தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை எழும்பூரில் திமுக அமைப்புச் செயலர் ஆலந்தூர் பாரதி, காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார் பாண்டியன்.

Leave a Reply