shadow

தமிழகத்திற்கு மீண்டும் ஏமாற்றம்: காவிரி வழக்கு மே 3ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை செயல்படுத்தாத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு தாக்கல் செய்த தமிழக அரசின் மனு இன்று சுப்ரீம்கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரித்தது. இந்த மனுவுடன் மத்திய அரசு தாக்கல் செய்த மனு, புதுச்சேரி அரசின் இடைக்கல மனு, கேரளாவின் சீராய்வு மனு ஆகிய மனுக்களும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

இன்றைய விசாரணைக்கு பின்னர் காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

‘காவிரி வழக்கின் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை. ஸ்கீம் பற்றி தற்போது சொல்ல முடியாது. மத்திய அரசு வரைவு அறிக்கை அளித்தபின்பே இதுபற்றி முடிவு செய்வோம்’ என்று நீதிபதிகள் தெரிவிட்த்ஹனர். இதனையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மே 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply